அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 09:58 AM

சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. இதற்காக அவர்களின் சம்பளத்தில் மாதம் ரூ. 300 வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்காக இத்திட்டத்தில் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்படி ஆசிரியர், அரசு ஊழியர்களுடன் அவர்கள் குடும்பத்தினருக்கும் கட்டணமில்லாத சிகிச்சை வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசிடம் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் பெற்றுள்ள காப்பீட்டு நிறுவனங்கள் அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளபடி சிகிச்சைக்கான முழு தொகை வழங்குவதில்லை. இதற்காக பல்வேறு காரணங்களை கூறி அரசு ஊழியர்களை இழுத்தடித்து வெறுப்பேற்றுகின்றன. புகார் செய்யவும் வழிகாட்டுதல் இல்லாததால் மாநில அளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், எம்.டி., இந்தியா, மெடி அசிஸ்ட் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் பெற்றுள்ளன. பெரும்பாலான சிகிச்சைகளுக்கு அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ள முழு காப்பீட்டுத் தொகையையும் மருத்துமனைகளுக்கு வழங்காமல் மோசடியில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக, கண் சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம்,கர்ப்பப்பை அகற்றத்திற்குரூ.50 ஆயிரம் என இரண்டிற்கு மட்டுமே சரியான காப்பீட்டு தொகை விவரம் குறிப்பிடப்பட்டுஉள்ளன. பிற நோய்களுக்கான காப்பீட்டுத் தொகை, சிகிச்சை நிலை போன்றவை காப்பீட்டு நிறுவனங்களுக்கும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே தெரிகிறது. பிற சிகிச்சைகளுக்கு 40 சதவீதம் காப்பீட்டு தொகை மட்டுமே பெறமுடிகிறது.
இதனால் இத்திட்டத்தில் இணைந்திருந்தும் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடன் வாங்கியே மருத்துவசிகிச்சைக்காக செலவிடும் சூழல் உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்படுகிறது. சிகிச்சை பெற்று காப்பீட்டு தொகை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டோரிடம் தமிழக அரசு விசாரணை நடத்தி, தவறுசெய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி ஜூலை 13ல் மதுரை மாவட்ட கருவூலத்திலும்,பின்னர் சென்னையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தலைமை அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.