நோ ஹெல்மெட்; நோ கீ மாணவரிடம் விழிப்புணர்வு

UPDATED : ஏப் 06, 2024 12:00 AM
ADDED : ஏப் 06, 2024 09:19 AM

திருப்பூர்:
ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், டூவீலர் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யும் நோக்கிலும், புதிய முயற்சியாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவதை பழக்கப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பள்ளி குழந்தைகள் மூலமாக, அவர்களது பெற்றோருக்கு அறிவுறுத்தும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வகையில், மாவட்ட போலீசார், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஆறு பள்ளிகளில் பயிலும், 550 மாணவ, மாணவியருக்கு ஹெல்மெட் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வீடியோ நோ ஹெல்மெட் நோ கீ என்பதன் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள், நோட்டீஸ்கள் ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில், பங்கேற்ற குழந்தைகளிடம் தங்களது வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.