நிடி ஆயோக் வளர்ச்சி குறியீடு; இரண்டாம் இடத்தில் தமிழகம்

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 10:04 AM

புதுடில்லி:
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில், 2023 - 24ம் ஆண்டில், இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகளை, நிடி ஆயோக் வெளியிட்டு உள்ளது.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றுசூழல் அளவு கோல்களின்படி, ஐ.நா., 16 இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த இலக்குகளில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில், மாநிலங்களுக்கான பட்டியலில், கேரளா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மதிப்பெண்களின் படி, கேரளா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் தலா 79 மதிப்பெண்களுடன் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளன. 78 மதிப்பெண்களுடன், தமிழகம் அடுத்த இடத்தில் உள்ளது. கோவா 77 மதிப்பெண்களுடன் இதற்கடுத்த இடத்தில் உள்ளது.
மோசமான செயல்பாட்டின் காரணமாக, 57 மதிப்பெண்களுடன், இந்தப் பட்டியலில் பீஹார் கடைசி இடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் 62, நாகாலாந்து 63 மதிப்பெண்களுடன் இதற்கு முந்தைய இடங்களில் உள்ளன.
யூனியன் பிரதேசங்களில், சண்டிகர், ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் தீவுகள் மற்றும் டில்லி ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த 2020 - 21ல், 66 ஆக இருந்த இந்தியாவின் மதிப்பெண், 2023 - 24ல், 71 ஆக உயர்ந்துள்ளது.
வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதற்கு உதவியுள்ளது.
எனினும், வருமானம் மற்றும் பாலின சமத்துவ குறியீட்டில் முன்பைக் காட்டிலும் மதிப்பெண்கள் குறைந்துள்ளன.