தமிழகத்தில் என்.ஐ.எஸ். நீச்சல் அகாடமி அமைக்க பயிற்சியாளர்கள் எதிர்பார்ப்பு

UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 09:12 AM
மதுரை:
தேசிய விளையாட்டு நிறுவனத்தின் (என்.ஐ.எஸ்.) தேசிய அளவிலான நீச்சல் பயிற்சி மற்றும் கல்வி மையம் தமிழகத்தில் உருவாக்க மாநில அரசு குரல் கொடுக்க வேண்டுமென நீச்சல் பயிற்சியாளர்கள், நீச்சல் சங்க நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆப் இந்தியா (சாய்) சார்பில் பெங்களூரு, பாட்டியாலாவில் பல்வேறு விளையாட்டுகளுக்கான தேசிய விளையாட்டு நிறுவன அகாடமி செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாட்டியாலாவில் இருந்த நீச்சல் அகாடமி நீக்கப்பட்டு தற்போது பெங்களூருவில் மட்டுமே செயல்படுகிறது. நீச்சல் பயிற்சியாளர்களாக ஓராண்டு டிப்ளமோ படிப்பதற்கு டிகிரி முடித்து தேசிய நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வென்றிருக்க வேண்டும் அல்லது அகில இந்திய பல்கலை அளவில் இரண்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு நீச்சலில் 'டைமிங்' தேர்வும் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே என்.ஐ.எஸ். நிறுவனத்தில் ஓராண்டு நீச்சல் டிப்ளமோ படிக்க முடியும்.
தற்போது வரை தேசிய அளவில் ஆண்டுக்கு 23 பேர் வரையே சேர்க்கப்படுகின்றனர். இரண்டு அகாடமிகள் இருந்த போது கூடுதல் பயிற்சியாளர்கள் பயன்பெற்றனர். இந்த டிப்ளமோ முடித்தவர்கள் தான் தேசிய, சர்வதேச அளவில் பயிற்சியாளர்களாக தகுதி பெறமுடியும்.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிறைய மாவட்டங்களில் நீச்சல்குளம் கட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ஆனால் மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் கீழ் உள்ள நீச்சல்குளங்களில் என்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற நீச்சல் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து நிறைய வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேச போட்டிகளில் வெல்கின்றனர். ஆனால் என்.ஐ.எஸ். பயிற்சி பெறுவதற்கு சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் என்.ஐ.எஸ். நீச்சல் அகாடமி கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.