பாக் ஜலசந்தியில் குறையும் பவளப்பாறைகள் தேசிய மைய ஆய்வில் தகவல்

UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 10:51 AM

சென்னை:
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, பாக் ஜலசந்தி உள்ளிட்ட பகுதிகளில் பவளப் பாறைகளின் பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக, தேசிய கடலோர ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் ஆழமான இடங்களில் பவளப்பாறைகள் காணப்படும். இறந்த கடல் உயிரினங்களின் உடல் மற்றும் எச்சங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு பின் படிந்து, பவளப் பாறைகள் எனப்படும் பாசியினங்கள் உருவாவதாகக் கூறப்படுகிறது.
பல வண்ணம்
சுண்ணாம்புக்கல் போன்று படிவங்களாக இது உருவானாலும், இதன் மேல் நீர் தாவரங்கள் போன்ற விழுதுகள் பல்வேறு வண்ணங்களில் உருவாகும். இதன் தோற்றம் கடல் தாவரம் போன்று காணப்படும்.
கடலோரப் பகுதிகளில் பவளப் பாறைகள் இருக்கும் இடங்களில் மீன் வளம் அதிகரிக்கும் மற்றும் பேரிடர் காலங்களில் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும். இதனால், கடலில் பவளப் பாறைகளை பாதுகாக்க வேண்டும் என, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி உள்ளிட்ட பகுதிகளில், 110 சதுர கி.மீ., பவளப் பாறைகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில், 30 சதுர கி.மீ., பரப்பளவுக்கான பவளப் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பவளப் பாறைகள் வெட்டி எடுப்பதை, 2005ல் மத்திய அரசு தடை செய்தது. அதன்பின், பவளப் பாறைகள் பரவல் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பவளப் பாறைகளின் பரவல் படிப்படியாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெப்பம் அதிகரிப்பு
பாக் ஜலசந்தி உள்ளிட்ட தென்கிழக்கு இந்திய கடலோரப் பகுதிகளில் பவளப் பாறைகள் நிலவரம் குறித்து, மத்திய அரசின் தேசிய கடலோரப் பகுதி ஆராய்ச்சி மையம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 2002ல் 37.6 சதவீதமாக இருந்த பவளப்பாறை பரவல், 2023ல் 30.82 சதவீதமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், கடல் நீரில் வெப்பநிலை அதிகரிப்பதால், பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, வன உயிரின ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. கடல் நீரில் வெப்பநிலை உயர்வதை கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து, ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாக் ஜலசந்தி உள்ளிட்ட பகுதிகளில், காலநிலை மாற்ற பாதிப்பு தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.