Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த கட்ட ஹைப்பர்லுாப் ரயில் ஆராய்ச்சி; சர்வதேச நிறுவனங்களுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

அடுத்த கட்ட ஹைப்பர்லுாப் ரயில் ஆராய்ச்சி; சர்வதேச நிறுவனங்களுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

அடுத்த கட்ட ஹைப்பர்லுாப் ரயில் ஆராய்ச்சி; சர்வதேச நிறுவனங்களுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

அடுத்த கட்ட ஹைப்பர்லுாப் ரயில் ஆராய்ச்சி; சர்வதேச நிறுவனங்களுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

UPDATED : மார் 14, 2025 12:00 AMADDED : மார் 14, 2025 11:43 AM


Google News
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., சார்பில் நடந்துவரும், ஹைப்பர்லுாப் ரயில் குறித்த ஆராய்ச்சியை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

விமானத்தை விட வேகமாக, நிலத்தில் செல்லும் அதிவேக போக்குவரத்து அமைப்பாக உருவெடுக்க உள்ள, ஹைப்பர்லுாப் தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.

மத்திய ரயில்வே துறை நிதியுதவியுடன், சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

அதாவது, குழாய் போன்ற அமைப்பில், காற்றுத் தடையை நீக்க, வெற்றிடத்தை உருவாக்கி, குறைந்த அழுத்த குழாய்களின் வாயிலாக ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் குறித்து, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த 2013ல் விளக்கினார்.

இதுகுறித்து, ஹைப்பர்லுாப் ஆல்பா என்ற, 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

மணிக்கு 1,000 கி.மீ., வேகத்துக்கு மேல் ரயில்களை இயக்கக்கூடிய, இந்த தொழில்நுட்பம் குறித்து, பல நாடுகள் ஆய்வு செய்கின்றன. சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், சென்னை அருகே தையூர் டிஸ்கவரி வளாகத்தில், இதற்கான ஆய்வு மையத்தை அமைத்தது.

அங்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் ஹைப்பர்லுாப் ரயிலை இயக்குவதற்கான ஆய்வுகள் மும்முரமாக நடக்கின்றன.

இதில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆய்வுகள் குறித்து நம்பிக்கை கொண்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், இந்த ஆய்வில் இணையும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

முக்கியமாக, ரயிலுக்கான உந்துவிசை, லெவிட்டேஷன், கட்டமைப்பு வடிவமைப்பு, உள்கட்டமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக, ஜெர்மனி நாட்டின் நிறுவனங்களான டி.யு.டி.சு., ஹைப்பர்லுாப் பிரைவேட் லிமிடெட், மியூனிக் தொழில்நுட்ப பல்கலை, நியோவேஸ் டெக்னாலஜிஸ் ஆகியவை, இதில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும், நாட்டின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஆலோசனைகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்கிய, 'சிஸ்ட்ரா' நிறுவனமும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us