நீட் நுழைவு தேர்வு ரிசல்ட் வெளியீடு; 80 பேர் முழு மதிப்பெண்

UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:57 PM

சென்னை:
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 80க்கும் மேற்பட்ட மாணவர்கள், முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு மே 5ல், நாடு முழுதும், 571 நகரங்கள், வெளிநாடுகளில், 14 நகரங்கள் என, 4,750 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம், 24 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள், http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின. இதில், தேசிய அளவில், 80க்கும் மேற்பட்ட மாணவர்கள், 720க்கு, 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவர் ஸ்ரீராம், 720க்கு, 720 மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல, சென்னை அண்ணா நகர் வேலம்மாள் பள்ளியை சேர்ந்த யூசுப் என்ற மாணவர், 720 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் படித்து, அரசின் இலவச பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரம், பள்ளிக்கல்வி துறையால் இன்று வெளியிடப்பட உள்ளது.