நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரம்: பின்தேதியிட்ட காசோலைகள் மீட்பு

UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 12:06 PM
பாட்னா:
சமீபத்தில் நடந்த நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ஆறு பின்தேதியிட்ட காசோலைகளை, பீஹார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. நாடு முழுதும், 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். சமீபத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தத் தேர்வின்போது, கேள்வித்தாள் கசிந்தது உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பீஹார் போலீசின் பொருளாதார குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, நான்கு மாணவர்கள், அவர்களுடைய குடும்பத்தார் உட்பட, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேள்வித்தாளை வழங்குவதற்காக, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து, ஒரு கும்பல், தலா, 3-0 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளது. சிலர், பின்தேதியிட்ட காசோலைகளை வழங்கிஉள்ளனர்.
பாட்னாவின் ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில், நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நாள், 35 பேருக்கு கேள்வித்தாள் மற்றும் விடைகள் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீஹாரைச் சேர்ந்த ஏழு பேர், உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, தலா ஒரு மாணவர் என, ஒன்பது மாணவர்களை விசாரணைக்கு, பீஹார் போலீஸ் அழைத்துள்ளனர்.
அந்த குறிப்பிட்ட வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆறு பின்தேதியிட்ட காசோலைகளை போலீசார் நேற்று மீட்டு உள்ளனர். இதைத் தவிர, எரிக்கப்பட்ட நிலையில் கேள்வித்தாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
அவை தேர்வின்போது வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையிடம், பீஹார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.