நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மஹாராஷ்டிராவில் 2 ஆசிரியர்களுக்கு தொடர்பு

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 06:27 AM

மும்பை:
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு, மஹாராஷ்டிராவில் 2 ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5ல் நடந்தது. முடிவு சமீபத்தில் வெளியானது. ஒரு லட்சம் இடங்களுக்கு, 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். வினாத்தாள் கசிந்ததாக, புகார்கள் வந்தன. நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பான வழக்கில், பீஹாரைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், லத்தூரில் சஞ்சய் துக்காராம் ஜாதவ் மற்றும் ஜலீல் உமர்கான் பதான் ஆகிய 2 ஆசிரியர்களிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஒருவர் லத்தூரில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியிலும், மற்றொருவர் சோலாப்பூரிலும் ஆசிரியராக உள்ளனர். இருவரும் லத்தூரில் தனியார் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகின்றனர்.