ஆக.,11 ல் நீட் முதுநிலை தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM
ADDED : ஜூலை 05, 2024 06:42 PM

புதுடில்லி:
ஆக., 11 ல் நீட் முதுநிலை தேர்வு நடக்கும் என மத்திய தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அந்நாளில் 2 ஷிப்ட்களாக நடக்கிறது.
நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஒரு புறம் இருந்தாலும் மத்திய அரசு நீட் தேர்வுக்கான முடிவை கைவிட முடியாது என திட்டவட்டமாக உள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜூன் 23ம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்துள்ளது. அன்றைய தினம் தேர்வு, இரண்டு ஷிப்ட்களாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.