அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்

UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 09:03 AM

விழுப்புரம்:
விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு துறை தலைவர் பெமினாசெல்வி வரவேற்றார். கல்லூரி டீன் செந்தில் தலைமையுரையாற்றினார். புதுச்சேரி பல்கலை., எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் நாகராஜன், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர், வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய மேம்பாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்பாடுகளையும் அவர் எடுத்துரைத்தார்.இக்கருத்தரங்கில், மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் துறையில், எதிர்காலத்தை வடிவமைக்கும் அறிவு, அனுபவங்கள் மற்றும் யோசனைகளைப் பரிமாறிக்கொள்ள, மாணவர்களை இக்கருத்தரங்கம் ஒன்றிணைத்தது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் தொடர்பான கட்டுரைகள், சமீபத்திய போக்குகள், முன்னேற்றங்கள், ஆராய்ச்சியின் சவால்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்றும் வகையில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.
உதவி பேராசிரியர் பழனி நன்றி கூறினார்.