Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ காளான் வளர்ப்பு பிரவுனி தயாரிப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு பிரவுனி தயாரிப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு பிரவுனி தயாரிப்பு பயிற்சி

காளான் வளர்ப்பு பிரவுனி தயாரிப்பு பயிற்சி

UPDATED : ஜன 08, 2025 12:00 AMADDED : ஜன 08, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், காளான் வளர்ப்பு மற்றும் பிரவுனி தயாரிப்பு குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, சிப்பெட் காலேஜ் எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 9ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், காளான் குடில் அமைப்பு, காளான் வித்து தயாரிப்பு, காளான் படுக்கை தயாரிப்பு, தொற்று நீக்கம் செய்தல், காளான் அறுவடை, காளான் உற்பத்தி செய்வதற்கான வரவு - செலவுகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

அதேபோல, வரும் 10ம் தேதி, பிரவுனி தயாரிப்பு பயற்சி அளிக்கப்படும். இதில், முட்டை மற்றும் முட்டையில்லாத கிளாசிக் பிரவுனிகள், உப்பு சேர்க்கப்பட்ட கேரமல் பிரவுனிகள், ராஸ்பெர்ரி பிரவுனிகள், கிரவுண்ட் பிரவுனிகள் தயாரிப்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர் 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us