முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
UPDATED : மே 11, 2026 09:05 PM
ADDED : மே 11, 2026 09:06 PM
கள்ளக்குறிச்சி:
முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படிப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் 2025 - 26ம் கல்வியாண்டில் டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு படிப்பு நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் ரஹமதுல்லா, தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் ஆகியோர் மாணவர்களுக்கு படிப்பு நிறைவு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.
இதில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் மற்றும் கணினி பொறியியல் துறைகளில் பயின்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கல்லுாரி நிர்வாகம் சார்பில், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்து, தொழில்நுட்ப துறையில் சிறந்த சாதனைகளை புரிய அறிவுறுத்தப்பட்டது. விழாவில் கல்லுாரி முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
