கொசு உற்பத்தி இல்லாத வளாகம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

UPDATED : ஜூன் 07, 2024 12:00 AM
ADDED : ஜூன் 07, 2024 10:49 AM

பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் முன், கொசு உற்பத்தி இல்லாத வளாகம் சான்றிதழ் பெற வேண்டும் என, கோவை மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், குறிப்பாக, பள்ளிகள் கொசு உற்பத்தி இல்லாத வளாகம் சான்றிதழ் பெற வேண்டும்.
அதற்காக அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் பள்ளி வளாகங்களில் துாய்மையைக் கண்டறிய சோதனை மேற்கொள்வார்கள். கல்வி நிறுவனங்கள் பள்ளி திறப்பதற்கு முன், தங்களது வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில், கொசு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்யாமல், அவற்றை பயன்படுத்துவதால் மழைக்காலத்தில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.அதனால், தண்ணீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
மழைக்காலங்களில் பள்ளி வளாகங்களை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.பள்ளி வளாகம் சுத்தமாக இருப்பதை, உறுதிசெய்து அறிக்கை சமர்ப்பித்தால், அறிக்கையின் அடிப்படையில் சுகாதாரத்துறை, 'கொசு உற்பத்தி இல்லாத வளாகம் சான்றிதழ் வழங்கும்.
ஆய்வின் போது, பள்ளிகளில் சுகாதார சீர்கேடு கண்டறியப்பட்டால் அவர்கள், 10ம் தேதிக்குள் பள்ளிகளை சுத்தம் செய்து, கட்டயாம் சான்றிதழ் பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.