விடைத்தாள்களுடன் மினி லாரி கவிழ்ந்ததில் போலீஸ் படுகாயம்

UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 10:21 AM

பெரம்பலுார்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மினி லாரிகள், பிளஸ் 1 விடைத்தாள்களுடன் திருச்சி மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களை நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தன.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் பிரிவு ரோடு பகுதி அருகே மினி லாரிகள் வந்த போது, பெரம்பலுார் மாவட்டத்திற்கு விடைத்தாள்களை ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையின் நடுவே பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், துப்பாக்கி ஏந்தி விடைத்தாள்களுக்கு பாதுகாப்புக்காக வந்த ஆயுதப்படை போலீஸ் சசிகுமார், 25, என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார், மினி லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர்.