பத்தாம் வகுப்பு பொது தேர்வு; முன்னேற்பாடு குறித்த கூட்டம்

UPDATED : மார் 26, 2025 12:00 AM
ADDED : மார் 26, 2025 10:18 AM

ஊட்டி:
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்குவதை அடுத்து தேர்வு முன்னேற்பாடு குறித்த கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் லட்சுமி பல்யா பேசியதாவது:
பத்தாம் வகுப்பு பொது தேர்வு, வரும், 28ம் தேதி தொடங்கி, ஏப்., 4ம் தேதி வரை நடக்கிறது. அதில், 28ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், ஏப்., 2ம் தேதி ஆங்கிலம், 4ம் தேதி விருப்ப மொழி பாடங்கள், 7ம் தேதி கணக்கு, 11ம் தேதி அறிவியல், 15ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளது.
பொது தேர்வை, 3,324 மாணவர்கள், 3,509 மாணவியர், என மொத்தம், 6,833 தேர்வர்கள், 58 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மேலும், தனி தேர்வர்கள், 142 மாணவர்களும், 68 மாணவியரும் என மொத்தம் 210 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுப்பாடு மையம் மற்றும் விடைத்தால் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து துறை சார்பில், தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு உரிய நேரத்தில் பஸ் வசதிகளை தேர்வு நடைபெறும் மையங்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். மின் துறையினர், தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், முதன்மை கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார் உட்பட, அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.