Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கீழ்ப்பாக்கம் கல்லுாரியின் மருத்துவ படிப்பு நிறைவு விழா

கீழ்ப்பாக்கம் கல்லுாரியின் மருத்துவ படிப்பு நிறைவு விழா

கீழ்ப்பாக்கம் கல்லுாரியின் மருத்துவ படிப்பு நிறைவு விழா

கீழ்ப்பாக்கம் கல்லுாரியின் மருத்துவ படிப்பு நிறைவு விழா

UPDATED : ஜூன் 20, 2024 12:00 AMADDED : ஜூன் 20, 2024 08:50 AM


Google News
Latest Tamil News
சென்னை:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியின், 59வது மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் நேற்று நடந்தது.

இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பின் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக பி.எஸ்சி., ஊடுகதிரியில், இதயவியல், பார்வை அளவியல், சிறுநீர் பிரித்தல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,127 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், 32 துறைகள் செயல்படுகின்றன. இவற்றில், தினமும் 1,048 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு பெற்ற, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக இவை உள்ளது. இன்று பல்துறையில் டாக்டர்களாக வெற்றி பெற்ற மாணவர்கள், இக்கல்லுாரியில் படித்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us