Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ கணித திறனறித் தேர்வு; டிச.,20க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு

கணித திறனறித் தேர்வு; டிச.,20க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு

கணித திறனறித் தேர்வு; டிச.,20க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு

கணித திறனறித் தேர்வு; டிச.,20க்குள் முன்பதிவு செய்ய அழைப்பு

UPDATED : டிச 02, 2024 12:00 AMADDED : டிச 02, 2024 08:50 AM


Google News
Latest Tamil News
கோவை: கணித திறனறித் தேர்வுக்கு, 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் டிச., 20ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும், 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கணித திறமையை வெளிப்படுத்தும் விதமாக மண்டல அறிவியல் மையம் சார்பில் கணித திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வு அடுத்தாண்டு ஜன., 5ம் தேதி நடக்கிறது.

காலை, 11:00 மணிக்கு துவங்கும் தேர்வானது, 90 நிமிடங்கள் இடம்பெறும்.இதில், விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் வரும் டிச., 20ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக ஒருவருக்கு ரூ.2,000, இரண்டாம் பரிசாக இருவருக்கு தலா ரூ.1,000, மூன்றாம் பரிசாக மூவருக்கு தலா ரூ.500, நான்காம் பரிசாக, 20 பேருக்கு தலா ரூ.250 வீதம் வழங்கப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு, 85239 09178, 0422 2963026/024 ஆகிய எண்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரையும், rsc.kovai14@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என, மண்டல அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us