உ.பி., அரசின் மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

UPDATED : நவ 05, 2024 12:00 AM
ADDED : நவ 05, 2024 04:39 PM

புதுடில்லி:
உத்தர பிரதேசத்தில் மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004 செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உ.பி.,யில் மதரசா கல்வி வாரிய சட்டம் 2004 அமலில் இருந்தது. இச்சட்டத்தின்படி இஸ்லாமிய கல்வி முறை குறித்து மாணவர்களுக்கு கற்று தரப்பட்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் 'உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004, அரசியலமைப்புக்கு எதிரானது' எனக் கூறி ரத்து செய்தது. மேலும், மதரசா மாணவர்களுக்கு முறையான கல்வி முறையில் இடமளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோ்ரட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜே பி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த அக்., 22ல் வழக்கு விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு தேதிக் குறிப்பிடப்படாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உ.பி., அரசு 2004-ல் கொண்டு வந்த மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும். இச்சட்டத்தை உறுதி செய்கிறோம். ஒரு மாநிலத்திற்கு சட்டம் இயற்றும் தன்மை இல்லாத பட்சத்தில் சட்டத்தை ரத்து செய்யலாம். மதச்சார்பின்மையின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக மதரசா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட் கூறியது தவறு. உ.பி., மதராசாக்களின் கல்வியின் தரத்தை அரசு ஒழுங்குப்படுத்த முடியும். அதேநேரம் கல்வித் தரம் தொடர்பான விதிமுறைகளில் மதரசாக்களின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. மதரசாக்களுக்கான சட்டம் சில மதப் பயிற்சிகளை உள்ளடக்கியதாலேயே அது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. இச்சட்டம் உ.பி.,யில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால், உ.பி.,யில் உள்ள 16,000 மதரசாக்கள், 2004 சட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படலாம்.