Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு அங்கன்வாடி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு அங்கன்வாடி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு அங்கன்வாடி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு அங்கன்வாடி ஆசிரியர்கள் எதிர்ப்பு

UPDATED : மே 30, 2024 12:00 AMADDED : மே 30, 2024 10:39 AM


Google News
பெங்களூரு:
அரசு ஜூனியர் துவக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவக்க நினைக்கும் பள்ளி கல்வித் துறையின் சுற்றறிக்கையை கண்டித்தும், அதை வாபஸ் பெறக் கோரியும், கல்யாண கர்நாடகா அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்கள், ஜூன் 3ம் தேதி கலபுரகியில் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் 1975ல் 100 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. தற்போது, 175 தாலுகாக்களில், 62,580 அங்கன்வாடிகள் உள்ளன. இவற்றில், 66,000 ஆசிரியர்கள், 60,000 உதவியாளர்கள் என, ஒரு லட்சத்துக்கு 26,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அங்கன்வாடியில் 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி சொல்லித் தரப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மதியம் சத்துணவும் வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிகள் போன்று, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் இல்லை. 4 - 5 வயதுள்ள மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவக்க வேண்டும் என, பெற்றோரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரசு, முதல் கட்டமாக, நடப்பாண்டு 262 அரசு ஜூனியர் துவக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படும் என அறிவித்தது.
எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவக்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு கல்யாண் கர்நாடகா மாவட்ட அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளியில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கினால், 3 - 6 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அங்கன்வாடிக்கு வரமாட்டார்கள். இதனால் 1.26 லட்சம் அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்கள் வேலை பறிபோகும். அதற்கு பதிலாக இந்த வகுப்புகளை, அங்கன்வாடியிலேயே துவக்க வேண்டும். எனவே, இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், ஜூன் 3ம் தேதி, கலபுரகியில் போராட்டம்' நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us