தொழில்நுட்ப பல்கலை.,யில் விடுதலை நாள் விழா

UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 10:21 AM
புதுச்சேரி :
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தேசிய கொடியேற்றி வைத்து, புதுச்சேரியின் பழங்கால பெருமைகள் மற்றும் பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை புரிந்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் செல்வராஜ், மாணவர் துனீர் வாபிட்கர் ஆகியோர் புதுச்சேரி விடுதலை வரலாற்றின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினர். மாணவர் நிதிஷ் ராஜின், கீபோர்டு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
பல்கலைக்கழக மாணவ, மாணவியர் புதுச்சேரி பிரதேசம் இந்திய அரசுடன் சேர காரணமாக இருந்த விடுதலைப் போராட்டங்களை மையப்படுத்தி திறந்தவெளி நாடகம் அரங்கேற்றினர்.
பேராசிரியை ஞான பிளோரென்ஸ் சுதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீரப்பசாமி, ஞானதாஸ், உடற்கல்வி இயக்குனர் சிவமணி ஆகியோர் செய்திருந்தனர்.