Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழர், தமிழ் மொழி உணர்வால் இணைந்திருப்போம் !

தமிழர், தமிழ் மொழி உணர்வால் இணைந்திருப்போம் !

தமிழர், தமிழ் மொழி உணர்வால் இணைந்திருப்போம் !

தமிழர், தமிழ் மொழி உணர்வால் இணைந்திருப்போம் !

UPDATED : ஜூன் 25, 2024 12:00 AMADDED : ஜூன் 25, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
சிவாஜி நகர் :
தமிழர், தமிழ் மொழி என்ற உணர்வால் நாம் இணைந்திருப்போம் என அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு விடுத்தார்.

அரசு உதவி

தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகம் பல்வேறு வகையில், தமிழர்களுக்கு உதவி வருகிறது. இந்த ஆணையரகத்தின் செயல்பாடுகள் குறித்து கர்நாடக தமிழர்கள் அறியும் வகையில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டத்தை நடத்தியது.

கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் தலைமை வகித்தார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் 2010ல் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை அமைக்கப்பட்டது. இதன்பின், இரண்டு ஆண்டுகளில் இதற்கான தனி வாரியம் துவக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிப்போர், இத்துறைக்குள் வருகின்றனர்.

உலக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழர், தமிழகம், தமிழ் மொழி என்ற உணர்வால் இணைந்திருப்போம். அண்டை மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தாய் மொழியுடன், உள்ளூர் மொழி, கலாசாரத்தை மதிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ் சங்கங்கள் உள்ளன. மொழி சார்ந்த விழாக்களுக்கு, நிதி நிலைமையை பொறுத்து தமிழக அரசு உதவி செய்யும்.

திட்டம்

பிற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, தமிழக கலைஞர்கள் அரசு செலவில் அழைத்து வரப்படுவர். 'வேர்களை தேடி' என்ற திட்டத்தின் கீழ், இங்குள்ள மாணவர்களை தமிழகத்துக்கு அழைத்து சென்று, வரலாறு, சுற்றுலா தலங்கள், பண்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.

கடந்தாண்டு இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து 550 மாணவர்களை அழைத்து வந்தோம். இந்தாண்டு ஜூலையில் 150 மாணவர்கள் வர உள்ளனர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தங்கள் ஊருக்கு என்ன செய்யலாம் என கருதுவோருக்கு எனது கிராமம் என்ற திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பெங்களூரு, குடகு, ஷிவமொகா, மங்களூரு, தங்கவயல், ஹனுார், சித்தாபுரா உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த தமிழ் சங்கம், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கர்நாடக வாழ் தமிழர்களின் நலன் தொடர்பான கோரிக்கை மனுக்களை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us