Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கு; கார்த்தி சொல்வது நிஜம்

சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கு; கார்த்தி சொல்வது நிஜம்

சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கு; கார்த்தி சொல்வது நிஜம்

சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கு; கார்த்தி சொல்வது நிஜம்

UPDATED : மார் 25, 2025 12:00 AMADDED : மார் 25, 2025 11:24 PM


Google News
சென்னை:
புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழகத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள், மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்

மேலும் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் தமிழில் படிப்பது குறைவாக உள்ளது. ஆரம்பக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கைக்காக நாங்கள் போராடுகிறோம்.

இந்த திட்டத்தின் மூலம் ஹிந்தி திணிக்கப்படவில்லை. ஹிந்தி திணிப்பை நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்காக நாங்களும் தான் போராடுகிறோம்.

தமிழகத்தின் உரிமையில் அக்கறையுள்ளவர்கள் நாங்கள். அதனால் தான், மேகதாது அணை கட்டிய தீருவேன் என்று சொல்லி விட்டு, இங்கு வருபவர்களுக்கு கருப்புக்கொடி காட்டினோம். ஆனால், தி.மு.க., தலைவர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, என்று, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி தொடர்ந்து பேசி வருகிறார். அவர் சொல்வது நிஜம் தான்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us