10ம் வகுப்பு தேர்வர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

UPDATED : ஜன 01, 2025 12:00 AM
ADDED : ஜன 01, 2025 09:49 AM

சேலம்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் பெயர் பட்டியல், தேர்வு எண்ணுடன் எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெயர், முன்னெழுத்து உள்ளிட்ட விபரங்களை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இறப்பு அல்லது மாற்றுச்சான்றிதழ் பெற்ற மாணவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜன., 2க்குள், நீக்கம் செய்து இறுதி பட்டியலை, தலைமை ஆசிரியர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேணடும்.
அதே நேரம், நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை தன்னிச்சையாக நீக்காமல், மாவட்ட கல்வி அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்பே, நீக்க வேண்டும் எனவும், தேர்வுத்துறை இயக்குனர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.