விழிப்புணர்வு இல்லாததால் தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையம் முடங்கும் அபாயம்

UPDATED : செப் 11, 2024 12:00 AM
ADDED : செப் 11, 2024 08:31 AM

விருதுநகர் :
விருதுநகரில் பெற்றோருக்கு மாற்றுத்திறன் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் 5 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவது குறைந்து வருகிறது. இதனால் அம்மையம் முடங்கும் அபாயம் உள்ளது.
விருதுநகர் சுப்பையா நாடார் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2020ல் ரூ.15 லட்சத்தில் 5 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதே பள்ளியின் முகப்பில் தின கவனிப்பு மையம் என்ற மற்றொரு ஆயத்த பயிற்சி மையமும் 6 முதல் 14 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக செயல்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு சிறு வயதிலே மாற்றுத்திறன் குறைபாடு கண்டறிவதில் சிக்கல் உள்ளது. வெறுமனே கை, கால் பாதிப்புகளை நேரில் பார்த்து கண்டறிந்து விடும் நிலையில், செவி, கண் பாதிப்புகளை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதை ஏழை பெற்றோர் துவக்க கட்டத்திலே கண்டறிவது கிடையாது. பள்ளியில் சேர்க்கப்பட்டு நாளடைவில் தான் தெரிய வருகிறது. இதனால் குழந்தைக்கான பயிற்சி தாமதமாக துவங்குகிறது.
விருதுநகரில் செயல்படும் இந்த தொடக்க நிலை ஆயத்த பயிற்சி மையம் பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் கட்டியும் தினசரி செயல்படாத சூழல் உள்ளது.
குழந்தைகளோடு பெற்றோர் வருவது குறைவாக உள்ளது. பொருளாதார வசதி கொண்ட பெற்றோர் தனியார் மருத்துவமனை, பயிற்சி மையங்களில் சேர்த்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். ஏழை, நலிவடைந்த பெற்றோருக்கு இது போன்ற வசதி இருக்கிறது என்பது கூட தெரியாமல் உள்ளது.
மேலும் மாற்றுத்திறன் பிரச்னையை ஏற்று கொள்ள தாமதம் எடுத்து கொள்கின்றனர். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வர வேண்டும். அரசு செயல்படுத்தும் இது போன்ற திட்டத்தில் பயனடைய வேண்டும்.