குழந்தைகளுக்கு போன் வேண்டாம்; தவிர்க்க பெற்றோருக்கு அறிவுரை

UPDATED : நவ 13, 2024 12:00 AM
ADDED : நவ 13, 2024 08:35 AM
கோத்தகிரி:
கோத்தகிரி அரவேனு கிளை நுாலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், நுாலகத்தை சுற்றிலும் துாய்மை பணி மேற்கொள்வதுடன், நுாலகத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது என வாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் வீட்டில் அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்; பெற்றோர் கூடுமானவரை குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்; பாட நுால்களை தவிர, அறிவுத்திறனை வளர்க்கும் வகையில், நுாலகத்தில் கொட்டி கிடக்கும் பிற அறிவு சார்ந்த நுால்களை படித்து வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும்; நாள்தோறும் நாளிதழ்களை படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நுாலகர் குமார் வரவேற்றார். விஸ்வநாத ராமன் நன்றி கூறினார்.