நிப்ட்-டீ கல்லுாரியில் கேரள மாணவர் குழு பார்வை

UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 11:39 AM
திருப்பூர்:
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், கேரளா, பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஷோபா அகாடமி பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவியர் 60 பேர் குழு வினர், கல்லுாரியில் செயல்படும் ஆடை உற்பத்தி சார்ந்த ஆய்வகங்கள், வகுப்பறைகளை பார்வையிட்டனர். ஆடை உற்பத்தி சார்ந்த இளங்கலை, முதுகலை பாட பிரிவுகள் குறித்து, கல்லுாரி நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, புதிய திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு சென்றனர்.
துணி, ஆடை தயாரிப்பின் பல்வேறு படிநிலைகளை நேரடியாக பார்வையிட்டு வியந்தனர். நிப்ட்-டீ கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி மகேஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பூர் வருகையால், ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் குறித்தும்; உயர்கல்வியில் ஆடை உற்பத்தி சார்ந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிப்பது குறித்த தெளிவு கிடைத்துள்ளதாக, மாணவியர் கருத்து தெரிவித்துள்ளனர்.