Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் மாநகரம்

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் மாநகரம்

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் மாநகரம்

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் மாநகரம்

UPDATED : மார் 18, 2024 12:00 AMADDED : மார் 18, 2024 05:59 PM


Google News
கோவை:
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவை மாநகரம் முழுதும் தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வரும் பிரதமர் மோடி, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களை சந்திக்க உள்ளார்.இந்த, ரோடு ஷோ சாய்பாபா கோவில் அருகே துவங்கி, வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் வரை, 2 கி.மீ., துாரம் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் ஷிமோகா விமான நிலையத்தில் இருந்து, கோவைக்கு இன்று மாலை, 5:30 மணிக்கு வருகிறார்.விமான நிலையத்திலிருந்து குண்டு துளைக்காத காரில், ரோடு ஷோ துவங்கும் பகுதியை அடைகிறார். அங்கு மாலை, 5:45 மணிக்கு &'ரோடு ஷோ&' நிகழ்ச்சி துவங்கி மாலை, 6:45 மணிக்கு நிறைவடைகிறது.அதன்பின், இரவு, 7:05 மணிக்கு, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். நாளை காலை, 9:30க்கு கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டு செல்கிறார்.பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர். முக்கிய இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். வாகன சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் பகுதி முழுதும், தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படை ஐ.ஜி., லவ்குமார் தலைமையில் அதிகாரிகள், அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.பிரதமர் மோடியின் கான்வாயில், போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்ல, மாற்றுப்பாதைகளையும் போலீசார் தயார் செய்து வைத்துள்ளனர்.ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளை கண்காணிக்க, உயரமான கட்டடங்களையும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேர்வு செய்து வைத்துள்ளனர். பிரதமரின் கான்வாய் செல்வதற்கு, மூன்று மணி நேரத்திற்கு முன் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும் என, மாநகர போலீசார் தெரிவித்தனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us