UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:30 AM
சென்னை: தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் வழியே, தடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங் களுக்கு, 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமைச் செயலகத்தில், ஆறு பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். குற்ற நிகழ்வுகளில், குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும், சான்று பொருட்களை அறிவியல் ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உதவுவதே, தடய அறிவியல் துறையின் முக்கிய பணியாகும்.தேர்வு செய்யப்பட்டவர்கள், தடய அறிவியல் ஆய்வகங்களில் பணியமர்த்தப்படுவர்.


