Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ் வளர்ச்சி துறை பணிகள் பாதிப்பு

அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ் வளர்ச்சி துறை பணிகள் பாதிப்பு

அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ் வளர்ச்சி துறை பணிகள் பாதிப்பு

அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ் வளர்ச்சி துறை பணிகள் பாதிப்பு

UPDATED : மார் 17, 2024 12:00 AMADDED : மார் 18, 2024 09:12 AM


Google News
சென்னை:
தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களிலும், இயக்குனர் பதவிக்கு தனியே அதிகாரி நியமிக்காமல், பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் இயக்குனராக இருந்த விஜயராகவன், கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின் புதிய இயக்குனர் நியமிக்கப்படவில்லை.தமிழ் வளர்ச்சி துறையின் சேலம் மண்டல துணை இயக்குனராக இருந்த பவானி, சமீபத்தில் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மதுரையில் இயங்கும் உலகத் தமிழ் சங்கத்தின் இயக்குனராக இருந்த அன்புசெழியன், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெற்றார்.அப்பதவியை, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக, அங்கு அலுவல் பணியில் இருந்த கோபிநாத் ஸ்டாலின், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.இவ்வாறு, முக்கிய பதவிகள் அனைத்திலும், தனியே அதிகாரிகள் நியமிக்காமல், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இது, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கூடுதல் பொறுப்பு காரணமாக, இரண்டு இயக்ககங்களிலும் பணிகள் பாதிக்கப்படுவதாக, அவர்கள் தெரிவித்தனர். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறும் அரசு, தமிழ் வளர்ச்சி துறைக்கு உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே, அனைவருடைய எதிர்பார்ப்பு.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us