Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரசார் பாரதிக்கு புதிய தலைவர்

பிரசார் பாரதிக்கு புதிய தலைவர்

பிரசார் பாரதிக்கு புதிய தலைவர்

பிரசார் பாரதிக்கு புதிய தலைவர்

UPDATED : மார் 17, 2024 12:00 AMADDED : மார் 18, 2024 09:10 AM


Google News
புதுடில்லி:
பிரசார் பாரதியின் தலைவராக இருந்த சூர்ய பிரகாஷ், 2020, பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். அதன் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.பிரசார் பாரதிக்கான தலைவரை மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு கூடி தேர்ந்தெடுக்கும். இக்குழுவின் தலைவராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளார்.மேலும், இக்குழுவில் இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான தகவல், ஒளிபரப்புத் துறை செயலர் சஞ்சய் ஜாஜு இடம் பெற்றுள்ளனர்.இந்த தேர்வுக் குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. இதில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நவனீத் குமார் சேகல், பிரசார் பாரதி தலைவராக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தனர்.அதை ஏற்று சேகலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைவராக நியமித்தார். இவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us