Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரிக்கு வகுப்பறை கட்ட ரூ.3.70 கோடி ஒதுக்கீடு

கல்லுாரிக்கு வகுப்பறை கட்ட ரூ.3.70 கோடி ஒதுக்கீடு

கல்லுாரிக்கு வகுப்பறை கட்ட ரூ.3.70 கோடி ஒதுக்கீடு

கல்லுாரிக்கு வகுப்பறை கட்ட ரூ.3.70 கோடி ஒதுக்கீடு

UPDATED : மார் 01, 2024 12:00 AMADDED : மார் 01, 2024 09:31 AM


Google News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் மதுரை காமராஜர் பல்கலை.,க்கு உட்பட்ட கல்லூரியாக 2004 ல் துவக்கப்பட்டது.2019ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. தற்போது பி.ஏ., பொருளதாரம், பி.காம்.(சி.ஏ.,), பி.எஸ்.சி., இயற்பியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதல் பாடப்பிரிவுகள் துவக்க திட்டமிட்டுள்ளனர். இதற்குத் தேவையான கூடுதல் கட்டிட வசதிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை கல்லூரி முதல்வர் சுஜாதா தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடந்தது. 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us