Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அவகாச நீட்டிப்பு இல்லை: குரூப் - 4 பதிவு நிறைவு

அவகாச நீட்டிப்பு இல்லை: குரூப் - 4 பதிவு நிறைவு

அவகாச நீட்டிப்பு இல்லை: குரூப் - 4 பதிவு நிறைவு

அவகாச நீட்டிப்பு இல்லை: குரூப் - 4 பதிவு நிறைவு

UPDATED : மார் 01, 2024 12:00 AMADDED : மார் 01, 2024 09:02 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., 108; இளநிலை உதவியாளர் 2,604; டைப்பிஸ்ட் 1,705; ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445 என, 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வு, ஜூன் 9ல் நடக்க உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 30ல் துவங்கியது; நேற்று முன்தினத்துடன் பதிவு முடிந்தது. கடைசி நாளில், இணையதள சர்வர் பிரச்னையால் அவகாசம் நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுவரை, 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.தேர்வு தொடர்பான கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us