Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் போட்டிகளில் மாணவர்களுக்கு பரிசு

அறிவியல் போட்டிகளில் மாணவர்களுக்கு பரிசு

அறிவியல் போட்டிகளில் மாணவர்களுக்கு பரிசு

அறிவியல் போட்டிகளில் மாணவர்களுக்கு பரிசு

UPDATED : மார் 01, 2024 12:00 AMADDED : மார் 01, 2024 08:46 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், மாணவர்களுக்கு அறிவியல் கருத்துக்களை பரப்பும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல், கணிதம் சார்ந்த போட்டிகளை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.இந்தாண்டு, பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறித் தேர்வு ஜன., 21ம் தேதியும், அறிவியல் கண்காட்சி, ஓவியம், கட்டுரை மற்றும் வினாடி - வினா ஆகிய போட்டிகள் பிப்., 13, 14ம் தேதிகளிலும் நடத்தப்பட்டன.இவற்றில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, சென்னை, கோபாலபுரம் பிர்லா கோளரங்கில், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:அரசியல் என்பது முள்மேல் படுக்கைதான். பதவி என்பது உதவி செய்யத்தான். தற்போது, ஏராளமானோர் படித்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு உரிய திறன் வளர்த்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us