பள்ளிகளில் விளையாட்டு வாரம்: 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த உத்தரவு

UPDATED : பிப் 25, 2024 12:00 AM
ADDED : பிப் 25, 2024 08:42 AM
ரெட்டியார்சத்திரம்:
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக &'பண்பாடு விளையாட்டு வாரம் சார்ந்த போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கலை ,உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்தாண்டு முதல் பண்பாடு விளையாட்டு வாரம்&' கொண்டாடப்பட உள்ளது. பிப். 27, 28, 29ல் பள்ளி , மார்ச் 5, 6, 7ல் வட்டாரம் , மார்ச் 12, 13ல் மாவட்டம், மார்ச் 19, 20ல் மாநில அளவிலான போட்டிகள் நடக்க உள்ளது.தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாக்கள், விலங்குகள், வனவிலங்குகள், கனவு பள்ளி, வரலாற்றுச் சின்னங்கள், இயற்கை சுற்றுச்சூழல் சார்ந்த வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், மாறுவேடம், கைவினைப் பொருள் தயாரிப்பு, பாரம்பரிய நடனங்கள், தோல், கம்பி, காற்று கருவிகள் இசைத்தல், பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் செயல் திட்ட கண்காட்சி, பேச்சு, நாட்டிய நாடகம், பல குரல் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடக்கிறது.வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். போட்டி நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகளில் பள்ளி பெயர், மாவட்டம், ஒன்றியம் பள்ளியின் பிரத்தியேக எண் போன்றவற்றை காட்சிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.