பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு புதுப்பிக்கும் திட்டம் துவக்கம்

UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 25, 2024 08:04 AM
கோவை:
பள்ளி மாணவ - மாணவியருக்கு தமிழக அரசு சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத் தொகையை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்த, புதிதாக கணக்கு துவங்க வேண்டியுள்ளது. அதற்கு, ஆதார் அட்டை தேவை.கடந்த, 2024 - 25 கல்வியாண்டில், முதலாம் வகுப்பில் புதிதாக சேர உள்ள, ஐந்து வயது பூர்த்தியடைந்த, 8 லட்சம் மாணவர்கள்; தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது பூர்த்தியடைந்த, 9.94 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு புதுப்பிக்கப்பட உள்ளது.ஏற்கனவே ஆதார் பதிவு செய்திருந்தாலும், குழந்தை பெயர், பிறந்த தேதி, முகவரியில் பிழையிருந்தால் திருத்திக் கொள்ளலாம். கோவை காளப்பட்டி அரசு பள்ளியில், ஆதார் பதிவு புதுப்பிக்கும் திட்டம் நேற்று துவங்கியது.முகாமில், மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்து, அதற்கான சான்றிதழை, அமைச்சர் மகேஷ் வழங்கினார்.அமைச்சர் மகேஷ் கூறுகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 57 வகையான திட்டங்கள் செயல்படுத்துகிறோம். இவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, மண்டல மாநாடு நடத்தி வருகிறோம்.அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் மாநாடு நடக்க உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மட்டும், இதுவரை 448 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது, என்றார்.