வகுப்பறையில் கலெக்டர் ஆபீஸ் மரத்தடியில் பள்ளிக்கூடம்

UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 05:46 PM
சென்னை:
மரத்தடியில் வகுப்புகள் நடக்கும் பள்ளிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்படும் என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., செந்தில்குமார்:
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட, புக்கிரவாரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி பழமையான பள்ளி. போக்குவரத்து இல்லாத ஊர்; மாணவியர் அதிகம் படிக்கின்றனர். தற்போதுள்ள கட்டடம் மிகவும் பழமையானது. புதிய கட்டடம் கட்டி தர வேண்டும்; சுற்றுச்சுவர், கழிப்பறை அமைக்க வேண்டும்.அமைச்சர் மகேஷ்:
இப்பள்ளிக்கு மூன்று வகுப்பறைகள், ஒரு ஆய்வகம், ஆசிரியர் அறை தேவைப்படுகிறது. வரும் நிதியாண்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டடம் கட்டப்படும்.செந்தில்குமார்:
கள்ளக்குறிச்சி ஒன்றியம், பொரப்படாகுறிச்சி ஊராட்சியில் உள்ள நடுநிலை பள்ளியில், 100 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். கடந்த ஆண்டு பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டது; வி.ஏ.ஓ., அலுவலகத்தில் பள்ளி செயல்படுகிறது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 20 வகுப்பறைகளில் கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது; மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்றனர். கலெக்டர் அலுவலகம் விரைந்து கட்டினால், அவர்களுக்கு வகுப்பறைகள் கிடைக்கும்.அமைச்சர் மகேஷ்:
ஒவ்வொரு மாவட்டத்திலும், மரத்தடியில் வகுப்புகள் நடக்கும் பள்ளிகள் குறித்த விபரங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியே கணக்கெடுக்கப்படுகிறது. அப்பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.