கலாஷேத்ரா பாலியல் விவகாரம் பரிந்துரையை அமல்படுத்த உத்தரவு

UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 09:10 AM
சென்னை:
பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா கல்லுாரி பேராசிரியரை நீக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை, உடனே அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.விசாரணை
சென்னை கலாஷேத்ரா கல்லுாரியில், மாணவியரை பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரி யர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. புகார் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுவை, கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்தது.இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உள் விசாரணை குழுவில், மாணவியர், பெற்றோர் சார்பில் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்; கலாஷேத்ராவில் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான கொள்கையை வகுக்க வேண்டும் என கல்லுாரி மாணவியர் ஏழு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பாக, பாலினப் பாகுபாடற்ற விரிவான கொள்கை வகுக்க உத்தரவிட்டிருந்தது.குற்றச்சாட்டு
இந்நிலையில், இவ்வழக்கில், நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவு:
இந்தியா மட்டுமின்றி, உலகளவில் புகழ்பெற்ற நிறுவனம் கலாஷேத்ரா. இந்நிறுவனத்தில், மாணவியரால் கூறப்பட்ட பாலியல் தொல்லை புகார், நீண்ட காலமாக கவனத்தில் கொள்ளாமல் இருந்தது, அந்த நிறுவனத்தின் புகழை பெரும் அவமானத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.இந்நிகழ்வு விரும்பத்தகாதது, மிகவும் கவலைக்குரியது. பாலியல் புகார் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை, உடனே நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகள் அருவெறுப்பானவை; மிகவும் கவலையளிக்கின்றன.குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக, கலாஷேத்ரா நிர்வாகம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரை, உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.