Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேழ்வரகு கஞ்சி குடியுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

கேழ்வரகு கஞ்சி குடியுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

கேழ்வரகு கஞ்சி குடியுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

கேழ்வரகு கஞ்சி குடியுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை

UPDATED : பிப் 24, 2024 12:00 AMADDED : பிப் 24, 2024 09:08 AM


Google News
பெங்களூரு:
கேழ்வரகு கஞ்சி குடிப்பதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ரத்த சோகை வராது. ஊட்டசத்து குறைபாடு இருக்கக்கூடாது. அப்போது தான் மாணவர்கள் மனதளவில் வலுவாகவும், வாசிப்பில் கூர்மையாகவும் மாறுவர் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரு விதான் சவுதாவின் மாநாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் கேழ்வரகு கஞ்சி வழங்கும் திட்டத்தை, முதல்வர் சித்தராமையா துவக்கிவைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:கடந்த 2013ல் காங்கிரஸ் அரசு காலத்தில், பால் உற்பத்தி அதிகரித்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, வாரத்தில் ஐந்து நாட்கள் பால் வழங்கும் திட்டத்தை அரசு துவக்கியது.பால், முட்டை
கே.எம்.எப்., என்ற கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு மூலம், மாணவர்களுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான தொகையை, கே.எம்.எப்.,க்கு அரசு வழங்குகிறது. இதனால் விவசாயிகளுக்கு உதவ முடிவு செய்தோம். கடந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு வாரம் இருமுறை முட்டை வழங்கும் திட்டத்தைத் துவக்கினோம்.தற்போது அதிக சத்துள்ள கேழ்வரகு கஞ்சி வழங்கும் திட்டத்தைத் துவக்கி உள்ளோம். இதனால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ரத்த சோகை வராது. ஊட்டசத்து குறைபாடு இருக்கக்கூடாது. அப்போது தான் மாணவர்கள் மனதளவில் வலுவாகவும், வாசிப்பதில் கூர்மையாகவும் மாறுவர்.பணக்காரர்கள், ஏழைகள், உழைக்கும் வர்க்கம், தலித்களின் குழந்தைகளும் நல்ல கல்வியை பெற வேண்டும். ஏனெனில் சமுதாயத்தின் எதிர்காலத்தை உருவாக்குவது மாணவர்கள் தான்.அறிவு வளர்ச்சிகல்வியால் மட்டுமே சுயமரியாதையை அதிகரிக்க முடியும். அறிவு வளர்ச்சி சாத்தியமாகும். கல்வி என்பது எழுதவும், படிக்கவும் மட்டும் போதிப்பதில்லை. சமூகத்தின் பிரச்னைகளுக்கு பதிலளிப்பதற்கு கல்வி அவசியம். உயர் கல்வி படித்த டாக்டர்கள், பொறியாளர்கள் கூட, இப்போது அறியாமையில் வீழ்ந்துள்ளனர். முட்டாள்தனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க, பசவண்ணர் உழைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us