அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் தவிர்க்க கல்வித்துறை தீவிரம்

UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 08:49 AM
தேனி:
அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் ஆப்சென்ட் ஆகாமல் தடுக்க பள்ளிக்கல்வித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 அரசுப்பொதுத்தேர்வில் 50ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் வழங்கியதால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தாண்டும் துவக்கத்தில் பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வந்துள்ளது. ஆனால் பல அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் இடையிலே பள்ளி வருவதை நிறுத்தியுள்ளனர். இதனால் இந்தாண்டும் மாணவர்கள் அதிக அளவில் ஆப்சென்ட் ஆக வாய்ப்புள்ளது. அதே நேரம் கடந்தாண்டை விட குறைவாக இருக்கும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.எமிஸ் மூலம் மாணவர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். அவர்கள் பள்ளியில் இருந்து டி.சி., வாங்கி சென்றால் மட்டும் அவர்களது பெயர் எமிசில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்கள் எடுக்கப்படாமல் அவர்களுக்கும் ஹால்டிக்கெட் வந்துள்ளது. அதனால் இடைநின்ற மாணவர்கள் தேர்வு எழுத வைக்க ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இடைநின்ற மாணவர்கள் தேர்வு எழுதாவிட்டால் ஆப்சென்ட் என மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தவிர்க்கப்படும். மாணவர் தேர்வு எழுதி தோல்வியடைந்தால் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும் என்பதால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.