5வது நாளாக போராட்டம் 1,500 ஆசிரியர்கள் கைது

UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 08:33 AM
திருப்பூர்:
தமிழ் மொழியின் வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படும் சங்கங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த, 2022ம் ஆண்டுக்கான விருதுகள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், சிறந்த மொழிப் பெயர்ப்பாளருக்கான விருது, மாநிலத்தில், 10 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில்,திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதி மணியனும் ஒருவர். அவருக்கு சான்றிதழுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட இருக்கிறது.எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் கூறியதாவது:
நான், 23 நாவல், 20 சிறுகதை நுால்கள், ஒரு நாடக தொகுப்பு, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் என, 100 படைப்புகளை வெளியிட்டுள்ளேன். கடந்த, 1993ல், ஜனாதிபதியிடம் &'கதா&' விருது, 1998ல், தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது என, பல விருதுகளை பெற்றுள்ளேன்.எனது பல சிறுகதைகள், பல இந்திய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 5 நாவல்கள் ஹிந்தி யிலும், 9 நாவல்கள் ஆங்கிலம், 5 நாவல் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே நடக்கும் புத்தக கண்காட்சியிலும் மொழி பெயர்ப்பு நுால்களை வாசகர்கள் அதிகம் வாங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.