ஜாக்டோ-ஜியோ பிப்.26 முதல் காலவரையற்ற போராட்டம்

UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 10:03 AM
மதுரை:
கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாதபட்சத்தில் பிப்.,26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட மதுரை மாவட்ட ஜாக்டோ- ஜியோ சார்பில் முடிவு செய்யப்பட்டது.வேலைநிறுத்த ஆயத்த மாநாடு மதுரை கலெக்டர் அலுவலக வளாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீதிராஜா, பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், ஜோயல்ராஜ் தலைமை வகித்தனர். முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் பேசினர்.அரசுப் பணியில் 2003க்கு பின் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண்டர் விடுப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறை தொழில்நுட்ப ஊழியர்கள், வாகன ஓட்டுனர்களுக்கு சம்பள முரண்பாட்டினை களைய வேண்டும். பேராசிரியர்களுக்கு பணிமேம்பாடு (சி.ஏ.எஸ்.,) ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஜாக்டோ- ஜியோ சார்பில் பிப்.,15 ல் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் பிப்.,26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.