கிராண்ட் மாஸ்டர் ரமேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா

UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:47 AM
ஆழ்வார்பேட்டை:
இளம் சாதனையாளர்களை உருவாக்கும் விதமாக கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷ், சென்னையில் செஸ் குருகுலம் எனும் அகாடமி நடத்தி வருகிறார்.பிரக்ஞானந்தா போன்ற சதுரங்க வெற்றியாளர்களை உருவாக்கிய இவருக்கு, துரோணாச்சாரியா விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது. இதைத்தொடர்ந்து, விக்டரி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன், தேஜஸ் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் அமைப்பு இணைந்து, ஆர்.பி.ரமேஷுக்கு நேற்று ஆழ்வார்பேட்டையில் பாராட்டு விழா நடத்தின.நிகழ்வில், ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி, ஐ.எப்.எஸ்., அதிகாரி திருமூர்த்தி, கலைமகள் மாத இதழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.விழாவில் ஆர்.பி.ரமேஷ், அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.விழாவில், ஆர்.பி.ரமேஷ் பேசியதாவது:
படித்தாயா, வீட்டுப் பாடம் செய்தாயா என, என்னை பற்றி ஒன்றுமே கேட்பதில்லை என என் மகள் என்னிடம் கேட்டதுண்டு. எதை செய்தாலும் அதை முழு மனதோடு செய் என அவளிடம் சொல்வேன்.குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ; எந்த துறையில் ஆர்வமோ அவற்றை முழுமையாக செய்ய விடுங்கள். அப்படியானால் அவர்கள் சாதனையாளர்களாக வரலாம்.இவ்வாறு அவர் பேசினார்.