உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி, மத பாகுபாடு கூடாது

UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:23 AM
சென்னை:
உயர்கல்வி நிறுவனங்களில், ஜாதி, மத பாகுபாடு, கோஷ்டி பூசல்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தமிழ்நாடு மாநில உருது அகாடமி ஆகியவற்றின் சார்பில், சென்னையில் திறந்தநிலை பல்கலை வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், தமிழர்களே துணைவேந்தர்களாக வர வேண்டும். அப்போது தான், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும்.பல்கலைகளிலும், கல்லுாரிகளிலும் தவறு நடக்காமல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சில தனியார் கல்லுாரிகளில் தவறு நடக்கிறது. அதை தடுக்க, உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.கல்லுாரி கல்வி இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை நியமித்துள்ளோம். அங்குள்ள நிர்வாகத்தை துாய்மைப்படுத்துவதற்கு இந்த முயற்சி எடுத்துள்ளோம். பல்கலைகள், கல்லுாரிகளை பொறுத்தவரை, ஜாதி, மத மோதல்கள் இருக்கக்கூடாது. இங்கு அனைவரும் சமம். எல்லா சமுதாய மக்களும் ஒரே சமமாக கருதப்பட வேண்டும்.அரசியல் தலையீடுகள், அதிகார தலையீடுகள், கோஷ்டி பூசல்கள் இருக்கக்கூடாது. துணைவேந்தர், முதல்வர், பேராசிரியர்கள் என, அனைவரும், நிர்வாகத்தை முறையாக நடத்த வேண்டும். ஜாதி பேதம் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.