UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 11, 2024 09:58 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலை புதுப்பிக்கவல்ல, ஆற்றல் பொறியியல் துறை சாண எரிவாயு பயிற்சி மையத்தின் சார்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளுக்கான நான்கு நாட்கள் பயிற்சி நடந்தது.இப்பயிற்சியில், சாண எரிவாயு உற்பத்தி அதன் பயன்பாடு, சுத்திகரிக்கப்பட்ட பயோமீத்தேன் தயாரிப்பு, சூரியவெப்பம் ஒளிமின்னழுத்த தொழில்நுட்பங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சாண எரிவாயு கலனின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த நடைமுறைகள், களப்பயிற்சியாகவும் பயிற்றுவிக்கப்பட்டது.இதில், புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையின் தலைவர் ரமேஷ், வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ரவிராஜ் , பேராசிரியர் பழனிசெல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.