சாதிக்கும் ஆர்வமும், படிப்பும் இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகலாம்!

UPDATED : பிப் 11, 2024 12:00 AM
ADDED : பிப் 11, 2024 09:56 AM
விழுப்புரம்:
சாதிக்கும் ஆர்வமும், அதற்கான வெறித்தனமான படிப்பும் தொடர்ந்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற முடியும் என முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்.விழுப்புரத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், நேற்று பிற்பகல் விந்தை விழுதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:
இளைஞர்கள், மாணவர்கள் எப்போதும் உங்களை உயர்வாகவே நினைத்து நடக்க வேண்டும். சிறிய காரியங்களை ஈடுபாட்டுடன் செய்தால், பெரிய காரியங்கள் தானாகவே நடக்கும். எந்த விஷயத்திலும் வெற்றிக்கு, கடினமாக பாடுபட வேண்டும்.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தொடர்ச்சியாக படியுங்கள். முதலில் 4 மணி நேரம் படியுங்கள், பிறகு பாட்டு பாடுங்கள் அல்லது நடனமாடுங்கள், பிறகு 4 மணி நேரம் படியுங்கள், பிறகு நன்கு துாங்க வேண்டும். நீட் தேர்வுக்கும் தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி படியுங்கள்.இடையே விளையாட்டு, டிவி பார்ப்பது போன்ற ரிலாக்ஸ் எடுத்து மீண்டும் கடினமாக படியுங்கள். சாதிக்கும் ஆர்வமும், அதற்கான வெறித்தனமான படிக்கும் செயல்பாடுகளும் இருந்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்விலும் வெற்றி பெற முடியும். ஆழ் மனதில் நமக்கான நோக்கத்தின் ஆர்வம் இருந்தால், வெற்றி கிடைக்கும். அதனை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.