Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை

குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை

குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை

குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை

UPDATED : பிப் 06, 2024 12:00 AMADDED : பிப் 06, 2024 07:02 PM


Google News
லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் களம் இறங்கி உள்ளது. ஆளும் பா.ஜ., அரசு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரத்தில் பா.ஜ.,வை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. லோக்சபா தேர்தல் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.தடை
கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
லோக்சபா தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும் குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. போஸ்டர்கள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம், முழக்கம் எழுப்புதல், மற்றும் பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது.அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரசாரத்தின் போது வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு அனுமதியில்லை. அரசியல் கூட்டங்களில் பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்பதில் தடையில்லை. இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் கடிதத்தில் கூறியுள்ளது.கடும் நடவடிக்கை
இந்த உத்தரவை மீறி தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, தேர்தல் விதிமீறல் என்பதால் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us