UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 06:52 PM
சென்னை:
உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ, சென்னையை இசை நகரமாக அறிவித்ததை கொண்டாடும் வகையில், சென்னை இசைக் கல்லுாரியில் நேற்று, இசை விழா நடத்தப்பட்டது.அதில், மரபு ஓவியம், மரபு சிற்பம், நவீன ஓவியம், நவீன சிற்பம் எனும் பிரிவுகளில் சிறந்த, 18 கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் சாமிநாதன் விருதுகளை வழங்கிகவுரவித்தார்.மரபு ஓவியத்துக்கான பிரிவில், ராமதாஸ், மணியம் செல்வன், ராஜ்மோகன், வாசுகி லஷ்மி நாராயணன், வேல்முருகன் ஆகியோர், கலைச் செம்மல் விருது பெற்றனர்.மரபு சிற்பத்துக்கான பிரிவில், செல்வநாதன்ஸ்தபதி, கி.ராஜேந்திரன், உலோக சிற்பக் கலைஞர் ரவீந்திரன், மர சிற்ப கலைஞர் பால்ராஜ் விருது பெற்றனர்நவீன ஓவியத்துக்கான பிரிவில், அ.விஸ்வம், கோ.சுப்பிரமணியம், எஸ்.வி.பிரபுராம், எஸ்.அருணகிரி, கே.புகழேந்தி, அதிவீரராம பாண்டியன் ஆகியோர், கலைச் செம்மல் விருதுகளை பெற்றனர்.நவீன சிற்பத்துக்கான பிரிவில், ந.கருணாமூர்த்தி, டி.விஜயவேலு, ஹேமலதா ஆகியோர் விருது பெற்றனர்.விழாவில், சுற்றுலா பண்பாட்டு துறைகூடுதல் செயலர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், இசை பல்கலையின் துணைவேந்தர் சவுமியாஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.