டி.பி.ஐ., வளாகத்தில் லிப்ட் மக்கர் சிக்கி தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு

UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 05:10 PM
சென்னை:
பள்ளிக்கல்வி தலைமை அலுவலகம் உள்ள சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டடம் உள்ளது. இதில், ஐந்தாவது மாடியில் கல்வி டிவிக்காக 8.5 கோடி ரூபாய் செலவில், புதிய படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் திறப்பு விழா, நேற்று காலையில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.பின், அவர் புறப்பட்டதும், அதிகாரிகள் மின்துாக்கி வாயிலாக இறங்கினர். வழியில் திடீரரென நின்று, மீண்டும் இயங்கியது. அவர்களை தொடர்ந்து, தனியார் டிவி ஊழியர்கள் வந்த போது, மூன்று மற்றும் நான்காவது மாடிக்கு இடையே மின் துாக்கி நின்று விட்டது.தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஊடகத்தினர், அங்கிருந்த ஊழியர்கள் மீட்பு பணிகளுக்கு உதவினார். இதையடுத்து, அரைமணி நேர தவிப்புக்கு பின், மின்துாக்கி நிறுவன ஊழியர் வந்து, மின் துாக்கியை திறந்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வி ஊழியர்கள் கூறியதாவது:
இந்த கட்டடத்தில், மின்துாக்கி இயக்கத்திற்கும், அதன் பராமரிப்பு பணிகளுக்கும் உரிய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் வரும் போது மட்டும் மின்துாக்கி ஊழியர்கள் பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர். மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை. இதனால் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.