நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

UPDATED : பிப் 06, 2024 12:00 AM
ADDED : பிப் 06, 2024 09:42 AM
நாமக்கல்:
நாமக்கல், சேலம் சாலையில் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரிக்கு, பல்கலைக்கழக மானியக்குழு, தன்னாட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான அனுமதி கடிதத்தை, கல்லுாரி செயலாளர் கவித்ரா நந்தினி பாபு, தாளாளர் செல்வராஜிடம் சமர்ப்பித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:
தேசிய தர மதிப்பீட்டு குழுவால், ஏ கிரேடு அங்கீகாரம் வழங்கப்பட்டதன் மூலம், நாமக்கல் நகரில் சிறந்த தன்னாட்சி பொறியியல் கல்லுாரியாக, செல்வம் தொழில்நுட்ப கல்லுாரி விளங்குகிறது. இந்த சாதனைக்கு உழைத்த பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவியர் பல்கலைக்கழக மானியக்குழு, அண்ணா பல்கலைக்கழகம், ஆளுகைக்குழு, கல்வி அலுவல்குழு, பெற்றோர், முன்னாள் மாணவ, மாணவியர் ஆகியோருக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.கல்லுாரி செயல் இயக்குனர் கார்த்திக், கல்லுாரி முதல்வர் நடராஜன், துணை முதல்வர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.